கீவ் நகரத்தை விட்டு வெளியேடுமாறு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி நிராகரித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மூன்றாவது நாளாக தொடர்கிறது. உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் ரஷியா வேகமாக தலைநகர் கீவ் -வை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள மெடோபோலில் நகரத்தையும் முழு கட்டுக்குள் ரஷிய ராணுவம் கொண்டு வந்துள்ளது.
மேலும், கீவ் நகரிக்கு வெளியே உள்ள மிக முக்கியமான விமான நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனால் தலைநகர் விரைவில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, தலைநகர் கீவ் நகரத்தை விட்டு வெளியேடுமாறு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி நிராகரித்துள்ளார். உக்ரைன் அதிபர் அமெரிக்காவுக்கு அளித்துள்ள பதிலில், “ இங்கு சண்டை நடைபெற்று வருகிறது. எனக்கு ஆயுதங்களே தேவை. பயணம் தேவை இல்லை” என்று கூறியிருக்கிறார். அமெரிக்காவின் மூத்த உளவுத்துறை அதிகாரி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.