“ அடுத்த 5 வருடங்களுக்கு அவரின் தலைமைத்துவம் நாட்டுக்கு அவசியம்.” – என்று ஐ.தே.க பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஐக்கிய தேசியக் கட்சி என்பது எப்பொழுதும் சவால்களுக்கு முகங்கொடுத்து வெற்றி கொண்ட கட்சி. பல தலைவர்களை உருவாக்கிய கட்சி. வெள்ளைக்காரர்களிடம் இருந்து நாட்டை மீட்டு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தவர் டி.எஸ்சேனநாயக்க.
உணவு பாதுகாப்பு சவாலை ஏற்று உணவு கொடுத்தவர் டட்லி சேனாநாயக்க. ஜே.ஆர். ஜெயவர்தன திறந்த பொருளாதாரத்தை அறிமுகம் செய்து நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தினார்.
வறுமையை ஒழித்து வீட்டுத் திட்டம் கொண்டுவர ஆர்.பிரேமதாஸ பங்காற்றினார். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு சவாலில் இருந்து நாட்டை மீட்டவர் ரணில் விக்ரமசிங்க. அவரின் தலைமைத்துவம் இன்று நாட்டுக்கு அவசியம்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்த போதெல்லாம் நாட்டை மீட்டது ஐ.தே.க தான். ஏனைய தலைவர்கள் வாய்ப்பேச்சில் மாத்திரம் தான் வீரர்களாக இருந்தனர். ரணில் விக்ரமசிங்க செயலில் பங்காற்றி வருகிறார்.
அடுத்த 5 வருடங்களுக்கு அவரின் தலைமைத்துவம் நாட்டுக்கு அவசியம். அவரின் வெற்றியை பெருவெற்றியாக்குவதற்கு கிராமம் கிராமமாகக் சென்று பணியாற்றுமாறு கோருகிறேன்.” என்றார்.










