2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மத்திய மாகாணத்தில் 15 கல்வி வலயங்களும் தரவரிசைப்படுத்தியுள்ளன. இதற்கமைய ஹட்டன் கல்வி வலயம் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது என ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இத் தரவரிசையின் பிரகாரம் வில்கமுவ கல்வி வலயத்திலிருந்து 2020 இல் உயர்தர பரீட்சைக்கு 272 மாணவர்கள் விண்ணப்பம் செய்து, அதில் 03 பாடங்களில் 196 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். இதனால் 70.96 சதவீதத்தினை பெற்று வில்கமுவ கல்வி வலயம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
ஹட்டன் கல்வி வலயத்திலிருந்து 1,712 மாணவர்கள் உயர்தரப்பரீட்சைக்கு விண்ணப்பித்தனர். இவர்களில் 1, 133 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தி பெற்று , 66.18 சதவீதத்தினை பெற்று இரண்டாம் இடத்தையும், வலப்பனை கல்வி வலயம் 683 மாணவர்கள் உயர்தரப்பரீட்சைக்கு விண்ணப்பித்து 447 பேர் மூன்று பாடங்களில் சித்தி பெற்று 65.45 சதவீதத்தினை பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளன.
ஏனைய கல்வி வலயங்கள் கண்டி 04 , மாத்தளை,05 நுவரெலியா 06, நாவுல 07, கொத்மலை 08, தெனுவர 09, கம்பளை 10 , கலேவெல 11 வத்தேகம 12 தெல்தெனிய 13 ஹங்குரங்கெத்த 14 கட்டுகஸ்தோட்டை 15 ஆகிய இடங்ளை முறையே பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த தரப்படுத்தலில் உயிரியல் விஞ்ஞனத்தில் கண்டி முதலாம் இடத்தினையும் ஹட்டன் இரண்டாம் இடத்தினையும் மாத்தளை மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளன.
உயிரியல் விஞ்ஞானத்தில் கண்டி முதலாம் இடத்தனையும் வலப்பனை இரண்டாம் இடத்தினையும் ஹட்டன் மூன்றாம் இடத்தி னையும் பெற்றுள்ளன.
வர்த்தகப் பிரிவில் கண்டி முதலாம் இடத்தையும், ஹட்டன் இரண்டாம் இடத்தையும், நுவரெலியா மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளதுடன் பொறியியல் தொழிநுட்பத்தில் மாத்தளை முதலாம் இடத்தினையும் ,ஹட்டன் இடத்தினையும், கண்டி மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளன.
உயிரியல் தொழிநுட்ப பாடத்தில் மாத்தளை முதலாம் இடத்தையும், வில்கமுவ இரண்டாம் இடத்தையும், ஹட்டன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்
