எல்ல ஒன்பது வளைவுப் பாலத்திற்கு அருகில் இன்று மரக்கிளையொன்று, சுற்றுலாப் பயணியொருவர்மீது விழுந்ததில் அவரின் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
58 வயது வெளிநாட்டு பிரஜையொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். காயமடைந்த வெளிநாட்டவர் சிகிச்சைக்காக பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
ராமு தனராஜ்