மரண தண்டனை விதிக்கப்பட்ட எமில் ரஞ்சன் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்ப்பு

மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதிகளால் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

அதற்கமைய, சிறை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ், எமில் ரஞ்சன் லமாஹேவா சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின் 8 கைதிகள் கொல்லப்பட்ட வழக்கில் சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு நேற்று (12) மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles