ஊவா மாவிலகம என்ற இடத்தில் 30-06-2021 மரண வீடொன்றிற்கு சென்றிருந்த ஐவருக்கு கொவிட் – 19 தொற்று உறுதியாகி இருப்பதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்.எம். பிரசன்ன தெரிவித்தார்.
தொற்று உறுதியான ஐவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அம் மரண வீட்டில், இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட 36 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர், அவரவர்கள் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஒரே கிராமத்தை (ஊவா மாவிலகம) சேர்ந்தவர்களாவர்.
இத்தகவல்களை ஊவா மாவிலகம பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர்கள் அனைவரும் உறுதிப்படுத்தினர்.
தொற்று உறுதியான ஐவருக்கும் 30-06-2021ல் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொண்டதையடுத்து, (இன்று) 01-07-2021ல் அது தொடர்பான அறிக்கையில், தொற்று உறுதி செய்யப்பட்டது.
எம். செல்வராஜா, பதுளை
