கொழும்பு, கொள்ளுப்பிட்டிய பகுதியில் நேற்று விபத்துக்குள்ளான இபோச பஸ் சாரதிக்கும், நடத்துனருக்கும் ஒருவார காலம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி விபத்தில் இருவருக்கும் உளரீதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்திற்கொண்டே, அவர்களுக்கு சம்பளத்துடன்கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த மத்துகம டிக்போவுக்குரிய பஸ், கொள்ளுப்பிட்டிய, டுப்ளிகேஷன் வீதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் நேற்று காலை நின்றபோது, அதன்மீது மரம் முறிந்து விழுந்துள்ளது.
இதில் ஐவர் பலியாகினர், 12 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
