மரம் முறிந்து விழுந்ததால் பலியான தாய்மாருக்கு முற்போக்கு கூட்டணி அஞ்சலி!

பலாங்கொடை வலவ்வ தோட்டத்தில் மரம் முறிந்து விழுந்ததால் பலியான பெண் தொழிலாளர்கள் இருவருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக இன்று(16 ) இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவிச் செயலாளர் கல்யாணகுமார் உட்பட முக்கியஸ்தர்கள் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை உயிரிழந்த குடும்பத்தினருக்கும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற குடும்பத்தினருக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக நிதியுதவி வழங்கப்பட்டது.

Paid Ad