மலேசியாவுக்கு மென்பொருள் பொறியாளர்களாக சென்ற இலங்கை தம்பதியினர் விபத்தில் பலி! அநாதரவானது மூன்று வயது குழந்தை!!
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மூன்று வயது குழந்தை உயிர் தப்பியுள்ளது.
மலேசியாவில் மென்பொருள் பொறியாளர்களாக பணியாற்றிய காலி பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுகளுடைய கணவன், மனைவியே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தமது குடியிருப்புக்கு அருகாமையில் இவர்கள் காருக்குள் இருந்தபோது, வேகமாக வந்த மற்றுமொரு கார் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின்போது 3 வயது குழந்தையும் காருக்குள் இருந்துள்ளது.
விபத்துக்குள்ளான குழந்தை கோலாலம்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றது. கடந்த வருடமே இவர்கள் தொழில்நிமித்தம் மலேசியா சென்றுள்ளனர். சடலங்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடு இடம்பெற்றுவருகின்றது.
