மலைநாட்டினை பாதுகாக்க பாராளுமன்ற ஒன்றியம் ஸ்தாபிப்பு!

மலைநாட்டினைப் பாதுகாத்தல் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர்  வசந்த யாப்பாபண்டார தெரிவு செய்யப்பட்டார்.

ஒன்றியத்தின் ஸ்தாபகக் கூட்டம்  பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர்  வீ. இராதாகிருஷ்ணன் பிரேரித்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர்   நிமல் பியதிஸ்ஸ வழிமொழிந்தார்.

அதன்பின்னர்,   வீ. இராதாகிருஷ்ணன் மற்றும்  நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் ஒன்றியத்தின் இணை உப தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

மலைநாடு மற்றும் மலைப்பகுதிகளைப் பாதுகாப்பதன் அவசியம் தொடர்பில் ஒன்றியத்தின் புதிய தலைவர் வலியுறுத்தியதுடன், ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில்   நிமல் பியதிஸ்ஸ,   வீ. இராதாகிருஷ்ணன்,   வருண லியனகே,   டபிள்யு.எச்.எம். தர்மசேன, மொஹமட் முஸம்மில்,  அப்துல் ஹலீம், கௌரவ உதயன கிரிந்திகொட மற்றும் கௌரவ வீரசுமன வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles