மலையகத்தில் அடை மழை!

சீரற்ற காலநிலையால் மத்திய மலைநாட்டில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா,  ஹட்டன்- பொகவந்தலா உள்ளிட்ட பல வீதிகளில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

நீரேந்தும் பிரதேசங்களில் பதிவாகியுள்ள அதிக மழை வீழ்ச்சி காரணமாக காசல்ரி, மவுசாக்கலை, கெனியோன், விமலசுரேந்திர, லக்ஸபான, நவலக்ஸபான, மேல் கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்ந்து வருகின்றன.

அதிக பனி மூட்டம் சாரதியை பாதுகாப்பாக வாகனங்களை செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles