மலையகத்தில் பி.சீ.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் : திகாம்பரம்

மலையகத்தில் பி.சீ.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் : கொவிட் நோயாளர்களுக்கு அதிக இடம் வேண்டும்!

மலையகத்தில் பி.சீ.ஆர். பரிசோதனைகளை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கிளங்கன் வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கட்டில்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்இ தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இதற்குப் பதிலளித்தஇ இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனஇ இதுகுறித்து அவதானம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார். இதன்பின்னர் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம்இ மலையகத்தில் கொவிட் இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாகவும்இ இதனால் பீ.சீ.ஆர். பரிசோதனைகளை நடத்தி நோயாளர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் திகாம்பரம் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம்,

பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. அரசாங்கம் ஆயிரம் ரூபா சம்பளத்தை அதிகரித்துக்கூட அந்தக் கம்பனி காரர்கள் ஆயிரம் ரூபா கொடுப்பதில்லை. 20 கிலோ பறித்தால் மட்டுமே ஆயிரம் ரூபா கொடுப்பதாகக் கூறுகின்றார்கள். 18 கிலோகிராம் பறித்தால் 1000 ரூபா வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து கம்பனிகளுடன் பேசி அரசாங்கம் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று கொவிட் வைரசினால் உலக நாடுகள் பாதித்துள்ளன. இலங்கையும் மிக மோசமாக பாதித்துள்ளது. மலையகத்தில் இருந்து கொழும்பிற்கு வந்து வேலை செய்யும் இளைஞர்களும், ஏனைய பகுதிக்கு வேலைக்குச் சென்றவர்களும் இன்று வேலை இல்லாமல் இருக்கின்றனர். பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஆசிரியர்கள், ஏனைய பிரிவினரும் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்குத் தீர்வு கிடைக்காவிடின் மலையகத் தோட்டத் தொழிலாளர்களும் வீதிகளில் இறங்கி போராட ஆரம்பித்து விடுவார்கள். எனினும், இந்த கொவிட் வைரஸ் பரவி விடக் கூடாது என்பதால் இதனை செய்யாமல் இருக்கிறோம். ஆகவே, உடனடியாக அரசாங்கம், கம்பனிக் காரர்களுடன் பேசி ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும். வறுமையின் காரணமாகவே, இசாலினி போன்ற சிறுமிகள் கொழும்பில் வந்து வேலை செய்தார்கள். நுவரெலியா, மஸ்கெலியா பிரதேசத்திற்கு கொவிட் நோயாளர்களைஒரேயொரு வைத்தியசாலையே இருக்கிறது. மூன்று லட்சம் மக்கள் வாழும் இந்தப் பிரதேசத்திற்கு ஒரேயொரு கொவிட் வைத்தியசாலையே ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 60 கட்டில்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றை அதிகரிக்குமாறு மக்களும், மருத்துவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இதுகுறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்ற கோரிக்கை விடுத்தார்.

 

Related Articles

Latest Articles