2000 பெற தகுதி நிறைய பேருக்கு இருந்தும் வழங்கபடாமை வேதனையாகயுள்ளது.
ஒவ்வொரு தோட்டப்புரங்களுக்கும் சுமார் 30 பேர் 20 பேர் என வழங்கியுள்ளார்கள். இது தொடர்பாக மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்களுக்கு மேலதிகமாக விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த பதிலும் இல்லை. நிறைய தோட்டப்புறங்களில் கிராம உத்தியோகஸ்த்தரிடம் விண்ணப்பகளை வழங்கியுள்ளார்கள்.
இதனால் அன்றாட தின கூலி வேலை செய்பவர்கள், ஆட்டோ சாரதிகள், வாடகைக்கு வாகனம் வாங்கி ஓட்டுபவர்கள், கொந்தஸ்த்தர்கள் மற்றும் பாஸ்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
2000 ரூபா பெறுவதிற்கு விண்ணபங்களை கொடுத்துவிட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்ககின்றார்கள்.
கிடைக்குமா? கிடைக்காதா? சம்பந்தபட்தவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஸ்கெலியா பிரதேசசபை உறுப்பினர் ராஜ் அசோக் தெரிவித்துள்ளார்