“ இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளராக இருந்தவர், அப்பதவியில் இருந்து மட்டுமே விலகியுள்ளார். அவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ மின்சாரம் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 10 லட்சத்துக்கும் அதிகமான பாவனையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரை பற்றி பேசும் போது அவர் மலையகத்தை இழிவுபடுத்தி பேசியுள்ளார். எனவே தற்கால சூழ்நிலையில் நடைமுறை வாழ்க்கையை புரிந்து கொள்ளாமல் இவ்வாறு சமூகங்களையும் மக்களையும் இழிவுபடுத்திபேசும் நபர்களையும் உடனடியாக நிரந்தரமாக பணியிலிருந்து நீக்க வேண்டும்.” – எனவும் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
தகவல் : நீலமேகம் பிரசாந்த்










