‘மலையகத் தமிழர்களின் வாழ்வியல்’ – தலைநகரில் புகைப்பட கண்காட்சி!

மலையகத் தமிழர்களின் வாழ்வியலையும், கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான புகைப்பட கண்காட்சி எதிர்வரும் 26, 27 ஆம் திகதிகளில் தலைநகரில் நடைபெறவுள்ளது.

இவ்விரு நாட்களிலும் கொழும்பு 7 இல் அமைந்துள்ள லயனஸ் வென்ட் கலை நிலையில் முற்பகல் 10 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை கண்காட்சியை பார்வையிட முடியும்.

தேயிலை சாயம் எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் 100 புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. 40 மலையக இளைஞர், யுவதிகளின் புகைப்படங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.

Paid Ad