மலையகமும் முழுமையாக முடங்கியுள்ளது

நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் அரசுக்கு எதிரான இன்றைய (06.05.2022) ஹர்த்தால் போராட்டம் காரணமாக மலையகமும் முழுமையாக முடங்கியுள்ளது.

மலையகத்தின் பாடசாலைகள் இயங்காத நிலையில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் இன்றி பாடசாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

பொது போக்குவரத்து சேவையில் இருந்து தனியார் பேருந்துகள் விழகியதன் காரணமாக பொது போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன். ஒரு சில அரச பேருந்துகள் மாத்திரம் சேவையில் ஈடுப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களும் முழுமையாக பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளதுடன் ஒரு சில தோட்டங்களில் கருப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளதுடன். சில தோட்டங்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம் பெறுகின்றன.

இரயில் ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளதனால் இரயில் நிலையங்களும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன.

பெரும்பாலான அரச நிறுவனங்களின் ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பில் பங்கு பற்றிய நிலையில் அரச நிறுவனங்கள் மூடிய நிலையில் காணப்படுகினறன.

மலையகத்தின வியாபார துறையினரும் இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி தமது வியாபார ஸ்தாபனங்களை மூடியதால் மலையக நகரங்கள் முழுவதுமாக கடைகள் பூடப்பட்டு நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

(க.கிஷாந்தன்)

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles