இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்குமிடையிலான சந்திப்பு இன்று (06) நடைபெற்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இராதாகிருஷ்ணன், வேலுகுமார், உதயகுமார் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இந்திய அரசின் நிதிப்பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திகள், எதிர்கால உதவித் திட்டங்கள் என்பன உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.
அத்துடன், மலையக மக்களுக்கு தேவையான கலாசார மற்றும் பொருளாதார மட்டத்திலான இந்தியாவின் உதவிகள் தொடரும் என இச்சந்திப்பின்போது தூதுவர் உறுதியளித்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.










