மலையக எழுச்சி பயணம் தலைமன்னாரில் இருந்து நாளை ஆரம்பம்!

மலையக தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படவேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பன உட்பட 10 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து ‘மலையக எழுச்சி பயணம்’ நாளை ஆரம்பமாகவுள்ளது.

2023 ஜுலை 28 ஆம் திகதி தலைமன்னாரில் ஆரம்பமாகவுள்ள குறித்த பாத யாத்திரை ஆகஸ்ட்12 ஆம் திகதி மாத்தளையை வந்தடையவுள்ளது.

இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், சிவில் அமைப்புகள் மற்றும் மலையக சமூகம்சார் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய  “மாண்புமிகு மலையக மக்கள்” கூட்டிணைவினால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாத யாத்திரைக்கு அனைத்து இன மக்களும் ஆதரவும், பங்களிப்பும் வேண்டும் என ஏற்பாட்டுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. பாத யாத்திரையில் முழுமையாக பங்கேற்காவிட்டாலும் ஒரு நாளாவது – அதிலும் குறிப்பிட்ட நேரமாவது பங்கேற்றால் அது பேருதவியாக அமையுமெனவும் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

மலையக மக்கள் தொடர்பில் அனுதாபம் தெரிவிப்பதைவிட, அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாத யாத்திரையில் பங்கேற்க விரும்புவோர், தன்னார்வ செயற்பாடுகளில் ஈடுபடக்கூடியவர்கள் கீழ்வரும் நபர்களை தொடர்புகொண்டு தகவல்களை கேட்டறியலாம் எனவும் ஏற்பாட்டுக்குழு குறிப்பிட்டுள்ளது.

1.Rev. S.Devadasan 076 734 1855
2. Rev.M.Saminathan 071 261 0747
3. Daniel Jesudasan 077 703 4136
4. J.Suresh 077 991 5459

Related Articles

Latest Articles