மலையக மக்களுக்குரிய திட்டங்கள் பற்றி ஆராய்வு!

அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருடன் இலங்கைக்கான இந்திய தூதுவர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது மலையக மக்களுக்குரிய திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக இந்திய வீடமைப்புத் திட்டத்தையும், மலையக பாடசாலைகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் வினைத்திறன் குறித்து இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அத்துடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கைக்கான விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளதாக தூதவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles