இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும், மலையக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (23) கொழும்பில் நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இலங்கைக்கான இந்திய தூதுவரும் கலந்துகொண்டிருந்தார்.
இச்சந்திப்பில் முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் பேசப்பட்ட விடங்கள் தொடர்பில் மனோ கணேசன் கூறியவை வருமாறு,
“ பேரிடரில் மலையக மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலையக மக்களுக்கு பாதுகாப்பான காணி வேண்டும். மலை உச்சியில் இருந்து அவர்களை பாதுகாப்பான இடங்களில் குடியேற்ற வேண்டும். இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளோம்.
இந்திய அரசாங்கத்திடமும் விடுத்துள்ளோம். தமது நட்புறவை பயன்படுத்தி இது தொடர்பில் இலங்கையிடம் பேசுமாறு கோரினோம்.
ஜனாதிபதி அநுர பாதுகாப்பான காணியை தருவார் என நம்புகின்றோம். தரவேண்டும்.”










