மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவராக லோரன்ஸ் நியமனம்!

மலையக மக்கள் முன்னணியின் புதிய செயலாளர் நாயகமாக பேராசிரியர் எஸ் விஜயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச்செயலாளராக பதவி வகித்த ஏ. லோரன்ஸ் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் உயர்பீடம் கொழும்பில் இன்று கூடியது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது என முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் அரசியல்துறை தலைவர் அரவிந்தகுமார் எம்.பி., பொதுச்செயலாளர் லோரன்ஸ், பிரதிச்செயலாளர் விஜயச்சந்திரன் உட்பட உயர்பீட கவுன்சில் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

” பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்த பின்னர் மலையக மக்கள் முன்னணியை மறு சீரமைப்பது தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதன் ஒரு கட்டமாக இன்று கட்சியின் புதிய செயலாளராக பிரதி செயலாளராக கடமையாற்றிய பேராசிரியர் விஜயசந்திரன் செயலாளர் நாயகமாக ஏகமனதாக கட்சியின் உயர்பீட அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கட்சியின் செயலாளர் நாயகமாக செயற்பட்டு வந்த லோரன்ஸ் தொடர்ந்தும் சுகவீனம் காரணமாக தன்னால் செயலாளராக செயற்பட முடியாது என்ற காரணத்தைத் தெரிவித்து தான் அந்த பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு பிரதி செயலாளராக இதுவரை கடமையாற்றிய பேராசிரியர் விஜயச்சந்திரன் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த கூட்டத்தின்போது முன்னாள் செயலாளர் நாயகம் லோரன்ஸ் கட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டும் எனவும் அவர் கட்சியோடு தொடர்ந்து பயணிக்க வேண்டும் எனவும் கட்சியின் உயர்பீடம் அங்கத்தவர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைய அவரை கட்சியின் பிரதித் தலைவராக நியமிப்பது எனவும் தீர்மானித்து அவரை கட்சியின் பிரதித் தலைவராக ஏகமனதாகத் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இந்த நியமனங்கள் இன்று கட்சியின் உயர்பீட அங்கத்தவர்களால்ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றது. எதிர்காலத்தில் இன்னும் கட்சியில் பல மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் இது கட்சியின் நலன் சார்ந்த விடயங்களை மாத்திரம் கருத்தில் கொள்ளப்படும் எனவும் தனிப்பட்ட யாருடைய விருப்பு வெறுப்புக்கும் முடிவுகள் எடுக்கப்பட மாட்டாது

எனவும் கட்சியில் முழுமையாக ஜனநாயக முறைப்படி உயர்மட்ட உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு முடிவுகள் எட்டப்படும் எனவும்எதிர்வரும் வாரங்களில் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு அனைவருடைய ஒத்தழைப்புடனும் இன்னும் பல மாற்றங்கள கொண்டுவரப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Paid Ad