மலையகத்தில் கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டுக்காக இந்திய அரசின் உதவிகள் தொடரும் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தன்னிடம் உறுதியளித்தார் என்று மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்தார்.
தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள லெட்சுமனார் சஞ்சய், சென்னையில் உள்ள தமிழக பாஜக அலுவலகத்தில் அண்ணாமலையை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இதன்போது மலையகத்தில் கல்வி மேம்பாடு, சுகாதார அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் பங்களிப்பு தொடர வேண்டும் என மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் கோரிக்கை விடுத்தார். இதனை பாஜக தமிழக தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்