இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான், மண்சரிவு அச்சுறுத்தலுக்கு உள்ளான மவுசாகல தோட்டத்திற்கு கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார்.
பேரிடர் அமைச்சினால் அங்கு வசிக்கும் 64 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட மாற்று வீட்டுவசதி திட்ட வீடுகளை செந்தில் தொண்டமான் பார்வையிட்டார்.
மேலும் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு தியதலாவ AG, NBRO NHDA அதிகாரிகள் மற்றும் தோட்ட முகாமையாளர் ஆகியோறுக்கு பணிப்ப்புரை வழங்கினார்.












