நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் 14 நாட்களுக்கு பயணக்கட்டுப்பாடு தொடரும்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, நாடு முழுவதும் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு அண்மையில் தளர்த்தப்பட்டது. அந்த தளர்வு 19 ஆம் திகதிவரை நீடிக்கும்.
பயணக்கட்டுப்பாடுகளை தொடர்வதா என்பது பற்றி அதன்பின்னரே தெரியப்படுத்தப்படும்.










