மாகாணம் தாண்டிய பஸ் மடக்கிப்பிடிப்பு – 38 பேர் கைது!

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாட்டைமீறி மட்டக்களப்பிலிருந்து கொழும்பு வந்த பஸ்ஸில் பயணித்த 38 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த பஸ் பொலிஸாரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது.

ஆரம்பக்கட்ட சட்ட நடவடிக்கைகளின் பின்னர் கைதானவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அத்துடன், பஸ்ஸில் கொண்டுவரப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles