மாகாண சபைகள் கலைக்கப்பட்டு செயற்படாமல் இருப்பதாக கருத்துகள் முன்வைக்கப்பட்ட போதும் அக் கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. மாகாணசபைகள் கலைக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பின்றி அரச அதிகாரிகளின் பங்களிப்புடன் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் இக் கூற்று ஏற்றுகொள்ள கூடியதல்ல என தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஆலோசனைகளை மக்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடால் மாத்தளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அக் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்துரையாற்றிய அவர்,
உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்களை நடாத்தும் அதிகாரம் கடந்த செப்டம்பர் மாதம் 20ம் திகதிக்கு பின்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிட்டியுள்ளது.
அதனால் காலம் தாழ்த்தாது 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்களை நடாத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பாரிய பொறுப்பாகும். குறிப்பிட்ட கால எல்லைக்குள் உள்ளூராட்சி மன்றம் தேர்தல்களை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.










