மாத்தளை முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசி மக மகோட்சவம் நாளை ஆரம்பம்

வரலாற்று புகழ்மிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசி மக மஹேட்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

அன்றைய தினம் காலை 7.30 மணியளவில் அடியார்கள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்ளும் யானை மீதான கொடி ஊர்வலமும், மாத்தளை பிரதான வீதியில் இடம்பெறும். தொடர்ச்சியாக இடம்பெறும் விசேட பூஜைகளுடன் மார்ச் மாதம் 5ஆம் திகதி பகல் மகேஸ்வர பூஜையும் மார்ச் 6ஆம் திகதி காலை 8 மணிக்கு பஞ்சரத பவனியும் இடம்பெறும். 8 ஆம் திகதி தீர்தோற்சவமும் 9 ஆம் திகதி மாலை பூங்காவனத் திருவிழாவும் இடம்பெறும்.

திருவிழாகாலத்தில் தினமும் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளதாக ஆலய அறங்காவலர் சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles