மாமாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த மருமகன் மரம் முறிந்து விழுந்து பலி! அட்டபாகையில் சோகம்!!

மாமாவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு வந்திருந்த மருமகன், மரம் முறிந்து விழுந்து பலியான பெருந்துயர் சம்பவமொன்று கம்பளை, அட்டபாகை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு (18) சுமார் 10.45 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

அட்டபாகை தோட்டத்தை சேர்ந்த இராமகிருஷ்னன் (வயது – 76) என்பவர் இயற்கை மரணம் எய்திய நிலையில் அவருக்கான இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறிவருந்தன. சடலம் அஞ்சலிக்காக அவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே மரண வீட்டு வளாகத்தில் இருந்தபோது மரம் முறிந்துவிழுந்து மருமகன் (ரட்னசாமி) உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, அட்டபாகை தோட்ட பகுதியில் பாடசாலை உட்பட மக்கள் நடமாடும் பகுதிகளில் முறிந்து விழக்கூடிய அபாயத்தில் பல மரங்கள் உள்ளன. எனவே, அவற்றை அகற்றி, தமது உயிரை பாதுகாக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Articles

Latest Articles