திட்டமிட்ட அடிப்படையில் 2023 மார்ச் 9 ஆம் திகதி உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
மக்களின் உரிமையான சர்வஜன வாக்குரிமையைப் பாதுகாக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளதாலும்,உரிய முறையில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்துள்ளதாலும், உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
