மாற்று சினிமா இயக்குநர் ‘குடிசை’ ஜெயபாரதி காலமானார்

நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் ஜெயபாரதி காலமானார். அவருக்கு வயது 77.

தமிழில் முதல்முறையாக 1979ஆம் ஆண்டு கிரவுட் ஃபண்டிங் முறையில் தயாரித்து இவர் இயக்கிய படம் ‘குடிசை’. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி பல்வேறு விருதுகளையும் குவித்தது. இதனையடுத்து ‘ஊமை ஜனங்கள்’, ‘ரெண்டும் ரெண்டும் அஞ்சு’, ‘உச்சி வெயில்’, ‘நண்பா நண்பா’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

கடைசியாக 2010ஆம் ஆண்டில் ‘புத்திரன்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம் உள்பட தமிழக அரசின் மூன்று விருதுகள் கிடைத்தன. இவர் இயக்கிய ‘நண்பா நண்பா’ படத்துக்காக வாகை சந்திரசேகருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வந்தாலும் கமர்ஷியல் சுழலுக்குள் சிக்காமல் மாற்று சினிமா பாதையிலேயே இயங்கி வந்தார் ஜெயபாரதி.

நுரையீரல் தொற்று காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி, இன்று (டிச.06) காலை 6 மணிக்கு ஜெயபாரதி காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த ஜெயபாரதி? – தமிழ் எழுத்தாளர்களான து.ராமமூர்த்தி, சரோஜா ராமமூர்த்தி ஆகியவர்கள் இவரது பெற்றோர். பள்ளி நாட்களில் நாடகங்கள் எழுதி நடித்தவர் இவர். இவரது முதல் படமான ‘குடிசை’ இப்போது மிகப் பிரபலமாக விளங்கும் ‘கிரவுட் ஃபண்டிங்’ (crowd funding) என்ற வகையில், கல்லூரி மாணவ மாணவியர்களிடமே, பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாகப் பெருமளவில் நிதி வசூலிக்கப்பட்டு எடுக்கப்பட்ட படம். இது தமிழின் மாற்று சினிமா என்றே விளம்பரப்படுத்தப்பட்டது.

பல்வேறு சிரமங்களுக்கு இடையே மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுத்து முடிக்கப்பட்ட படம் இது. ‘குடிசை’ படத்துக்கு இன்னும் நிதி தேவைப்பட்டபோது, சென்னையில் வேறு ஒரு விஷயமாக வந்திருந்த மிருணாள் சென் இவரது படத்தைப் பார்த்துவிட்டு இவரைப் பாராட்டி, அவரது நண்பரிடம் இந்தப் படத்துக்காகப் பணம் கொடுத்து உதவச் சொன்ன சம்பவமும் நடந்துள்ளது. தமிழில் வழக்கமாக வெளிவரும் கமர்ஷியல் படங்கள் இல்லாமல், தரமான மாற்று சினிமா உருவாக்கவேண்டும் என்று எப்போதும் செயல்பட்ட இயக்குநர் இவர்.

இளவயதில் சத்யஜித் ரே, ரித்விக் கட்டக், தபன் சின்ஹா போன்ற இயக்குநர்களால் கவரப்பட்டு, பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு எழுத்தாளராகவும் இயக்குநராகவும் ஆனவர் ஜெயபாரதி. பத்திரிக்கைகளில் வெளிப்படையாகவும் உண்மையாகவும் விமர்சனம் எழுதியவர். இளவயதில் இவரது நண்பர்கள் மாலன், பாலகுமாரன் ஆகியோர். கணையாழியிலும் தினமணிக் கதிரிலும் பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

இவரது விமர்சனங்கள் பற்றி இயக்குநர் பாலசந்தரே, ‘எம் படம் நல்லா இல்லைங்கறான்.. இவனே டைரக்ட் பண்ணுற படம்தான் நல்லா இருக்குமாம்’ என்று கமெண்ட் அடித்திருக்கிறார். அதே பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்தில், ரஜினியின் வேடத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் இவரே. ஆனால், பாலசந்தர் இவரைப் பற்றிப் பேசியதனால் படம் எடுக்கத் தூண்டப்பட்டு, நிதி திரட்டி மிகக் குறைந்த பட்ஜெட்டில் ‘குடிசை’ படத்தை 1979-ல் எடுத்தார். இவர் எடுத்த படங்களின் எண்ணிக்கை ஏழு. குடிசை, ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் அஞ்சு, உச்சி வெயில், நண்பா நண்பா, குருஷேத்ரம், புத்திரன் ஆகியவை.

தனது வாழ்க்கையில் இயக்குநர் ஜெயபாரதி சந்தித்த பிரச்சினைகளையும் அனுபவங்களையும் ‘இங்கே எதற்காக?’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தைப் படித்தால், தமிழில் தரமான படங்களுக்கு வரவேற்பு இல்லாததின் துயரம் நமக்குத் தெளிவாகவே புரியும். மாற்று சினிமா என்பது தமிழில் இதுவரை ஏன் சாத்தியமாகவில்லை என்பதற்கு இப்புத்தகம் சான்று. டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடாக வந்த புத்தகம் இது.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles