மிகப்பெரிய சரக்குக் கப்பல் இலங்கை வந்தது! (படங்கள்)

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் எனக் கருதப்படும் எவர் ஏஸ் (Ever Ace) கப்பல் இன்று (06) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தக் கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும் கொண்டதுடன், 23,992 கொள்கலன்களைக் கொண்டுசெல்லும் திறன்கொண்டது.

இந்த சரக்கு கப்பலில் சுமார் 24 ஆயிரம் கொள்கலன் பெட்டிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

எவர் கிரீன் (Evergreen) கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல், கடந்த ஜூலை மாதம் கொள்கலன் கையாள்கைக்கு இணைக்கப்பட்டது.

நெதர்லாந்தின் ரோடர்டேம் துறைமுகத்திலிருந்து, கடந்த மாதம் புறப்பட்ட குறித்த கப்பல், இன்று (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இது போன்ற பாரிய கொள்கலன் கப்பல்களைக் கையாளக்கூடிய 24 துறைமுகங்கள் உலகில் உள்ளன.

எனினும், தெற்காசியாவில் அந்தக் கப்பல் நங்கூரமிடக்கூடிய ஒரேயொரு துறைமுகம் கொழும்பு துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு துறைமுகத்திற்கு இறக்குவதற்காக ஒரு தொகை கொள்கலன் பெட்டிகளுடன் இந்த கப்பல் இன்று இலங்கை வந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கடற்படை கப்டன் நிஹால் கெப்பட்டிபொல தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles