மின்சாரம் தாக்கி இருவர் பலி!

மட்டக்களப்பு, கிரானில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

21 மற்றும் 51 வயதான குறித்த இருவரும் யானை வேலியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இன்று (13) காலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள செய்கையை பாதுகாப்பதற்காக சென்ற இருவரே அனர்த்தத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.சடலங்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles