மின்சாரம் தாக்கி முதியவர் பலி!

மின்சாரம் தாக்கி நேற்று இரவு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

உடகம தீகல்ல ஹாலிஎல பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மரக்கறி தோட்டத்தில் பயிர் செய்கைக்காக இழுக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

ராமு தனராஜா

Related Articles

Latest Articles