மின்வெட்டு நேரத்தில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு

நாட்டில் இரவுவேளைகளிலும் மின்வெட்டு அமுலாவதால், கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன என்று பொலிஸ் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களில் அதிகமானவை, மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது இடம்பெற்றவை என தெரியவந்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மின்சாரம் துண்டிக்கப்படும்போது பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பதும் திருட்டு அதிகரிக்க காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் சில தினங்களுக்கு முன்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விகாராதிபதியின் அலுவலக அறையில் உள்ள தங்க தாயத்து மற்றும் பெறுமதிமிக்க பொருட்கள் திருடர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது. விஹாரையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தாலும் அச்சந்தர்ப்பத்தில் மின்வெட்டு அமுலில் இருந்ததால் கேமராக்கள் செயலிழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய சில இடங்களிலும் மின்வெட்டு வேளையில் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Related Articles

Latest Articles