மின் கட்டண அதிகரிப்புக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி!

அமைச்சரவையால் கோரப்பட்ட மின் கட்டண திருத்தத்துக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள மின் கட்டண திருத்தத்தின் ஏனைய விடயங்கள் தொடர்பில் சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானமானது தமது ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் என கூறியுள்ளார்.

மின் கட்டணத்தை 65 முதல் 70 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles