மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி!

திருகோணமலை , கின்னியா பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

17 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது படகு கவிழ்ந்ததில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles