மீன்பிடித்துக்கொண்டிருந்த சிறுவன் ரயில் மோதி பலி!

திருகோணமலை – தம்பலகாமம் பகுதி யில் நேற்று ரயில் மோதி சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் சிக்கிய மேற்படி சிறுவன் உயிரிழந்துள்ளார்.

தம்பலகாமம் பகுதியிலுள்ள பாலத்துக்கு அருகில் சக நண்பர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த சிறுவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

முள்ளிப்பொத்தானை, யூனிட் – 07 பகுதியைச் சேர்ந்த தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவனான நளீம் முஹம்மதுசப்ரிட் (வயது 14) என்பவரே மேற்படி விபத் தில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles