மீறியபெத்தை மண்சரிவுப் பிரதேசத்திற்கு அண்மையில் வசித்துவரும் 132 குடும்பங்களுக்கு புதியவீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வகையிலான வேலைத் திட்டத்தினை ஹல்துமுள்ளை இடர் முகாமைத்துவப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
இப் புதியவீடுகளை நிர்மாணிப்பதற்கான காணித் துண்டுகளும், அருகாமையிலுள்ள பெருந்தோட்டமொன்றிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய இடர் முகாமைத்துவப் பிரிவினரால் வீடொன்று பன்னிரு இலட்சம் ரூபா செலவில், 132 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகமையின் உத்தரவிற்கமைய ஹல்துமுள்ளை பிரதேச செயலாளர் சுனேத் ஜினேந்திரசேனவின் வழிநடாத்தலில் மேற்படி வீடமைப்புக்கள் இடம்பெறவுள்ளன.
மீறியபெத்த மண்சரிவு அனர்த்தம் 2014 நவம்பர் 29 ஆம் திகதி இடம்பெற்றது. இச்சம்பவத்திர் 37 பேர் பலியாகியிருந்ததுடன் 75 குடியிறுப்புக்கள் சேதமாகியுள்ளன. இவர்களுக்கானவீடமைப்புக்கள் நிறைவுபெற்று, அவ்வீடுகள் பாதிக்கப்பட்டமக்களுக்கு ஏற்கனவேவழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அப் பிரதேசத்திற்கு அண்மையிலுள்ள மண் சரிவு அபாயப் பிரதேசத்தில் மேலும் 132 குடும்பத்தினர் இருந்துவருகின்றனர். இவர்கள் தமக்கானவீடுகளை அமைத்துத் தருமாறுகோரிபல்வேறுபோராட்டங்களையும்,ஆர்ப்பாட்டங்களையும் கடந்தகாலங்களில் மேற்கொண்டிருந்தமையும் இங்குகுறிப்பிடத்தக்கது.