முகக்கவசம் அணியுமாறுகூறிய PHI அதிகாரிமீது மண்வெட்டி தாக்குதல்

முகக்கவசம் அணியுமாறு மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் எச்சரிக்கை செய்த PHI அதிகாரி ஒருவரை மண்வெட்டியால் தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

வாழைச்சேனை பகுதியில் முகக்கவசம் அணியாது இருந்த நபரை முகக்கவசம் அணியுமாறு எச்சரிக்கை செய்த பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை அந்த நபர் மண்வெட்டியால் தாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது காயமடைந்த பொது சுகாதார பரிசோதகர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக மட்டகளப்பு வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles