முக பளபளபுக்கும், நீள முடிக்கும் டிப்ஸ் கொடுத்த நடிகை சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி, இவர் நடிகையாக வருவார் என யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் அந்த துறையில் சாதிப்பார் என பார்க்கப்பட்டது.

ஆனால் மலையாளத்தில் தமிழ் பெண்ணாகவே பிரேமம் படத்தில் நடித்து தமிழ், தெலுங்கு என 3 மொழி ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார். இப்போது இவரது நடிப்பில் தெலுங்கில் Love Story என்ற படம் வெளியாகியுள்ளது, படத்திற்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சாய் பல்லவி பேசும்போது, எனது முடிக்கும் முகத்திற்கும் ஷேம்பு, சோப் என எதுவும் நான் பயன்படுத்துவது இல்லை.

இயற்கையான கற்றாழை போன்றவற்றை தான் நான் பயன்படுத்துகிறேன். அதுமட்டும் இல்லாமல் நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles