முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.

இதன்போது சந்தையில் பெருமளவு அதிகரித்துள்ள முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.

Related Articles

Latest Articles