மைத்திரியை சிறையில் அடைக்க சதித்திட்டம்! தயாசிறி பகீர் தகவல்!!

” மைத்திரிபால சிறிசேனவை திட்டமிட்ட அடிப்படையில் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதன் பின்னணியில் செயற்படுபவர்கள் யார் என்பதும் எமக்கு தெரியும். நேரம்வரும்போது விவரம் வெளியிடப்படும்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எமது தலைவர் அரசை விமர்சித்துவருவதால், எதாவது செய்து அவரை சிறையில் அடைப்பதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இந்த சவாலை அவர் எதிர்கொள்வார். எமது கட்சியும் தயார்நிலையில்தான் உள்ளது. மைத்திரிபால சிறிசேனவை பலவந்தமாக சிறையில் அடைக்க முற்படுவது யார் என்பதும் எமக்கு தெரியும். அரச பிரதானிகளா அல்லது வெளியில் உள்ளவர்களா என தற்போதே குறிப்பிடமுடியாது. நேரம்வரும்போது எல்லாவற்றையும் வெளிப்படுத்துவோம்.

நாட்டில் சட்டமென ஒன்று இருக்கின்றது. ஆனால் அதற்கு அப்பால் சென்று, மைத்திரியை சிறையில் அடைக்க வேண்டும் என சில அமைச்சர்கள் வலியுறுத்திவருகின்றனர். எனவே , இதன் பின்னணியில் இரகசிய நிகழ்ச்சி நிரலொன்று இருக்கக்கூடும்.

அதேவேளை, அரசிலிருந்து வெளியேறுவது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு இன்னும் முடிவெடுக்கவில்லை. எனினும், அரசின் பயணம் தவறெனில் அதனை தைரியமாக சுட்டிக்காட்ட மத்திய குழு அனுமதித்துள்ளது. அரசின் பதவிகாலம் முடியும்வரை நாம் அரசில் அங்கம் வகிப்பாமோ என்பதை இப்போது கூறமுடியாது. சிலவேளை, எமது கட்சி நீக்கப்படக்கூடும்.”
” – என்றார்.

Video thumbnail
இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்ட ரஞ்சன்
01:37
Video thumbnail
கேஸ் விபத்துக்கள் குறித்து மௌனம் காக்கும் அரசாங்கம்
01:38
Video thumbnail
“எதிர்வரும் நாட்களில் நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடையும் நிலையில்”
01:41
Video thumbnail
“தனது இரு குழந்தைகளை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய தந்தை கைது”
01:42
Video thumbnail
உலக சாதனையுடன் அசத்தும் அட்டன், கொட்டகலை சிறுவன்
04:02
Video thumbnail
அதிவேகமும், அவசரமும் உயிரைப் பறிக்கும்!
01:11
Video thumbnail
அடிப்படை வசதிகளுக்காக அல்லாடும் பிள்ளைகளும், ஆசிரியர்களும்!
04:21
Video thumbnail
பசறை பிரதேச சபைக்கு முன்பாக போராட்டம்
03:11
Video thumbnail
“எதிர்வரும் மூன்று வாரங்களில் நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அதிகரிக்கலாம்”
01:36
Video thumbnail
தற்போதைய பிரச்சினைகளுக்கு கடந்த அரசாங்கங்கள் பொறுப்பல்ல - வஜிர அபேவர்தன
00:32

Related Articles

Latest Articles