மைத்திரி, சஜித்துக்கும் டில்லி அழைப்பு!

தென்னிலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களை இந்தியா தனித்தனியே டில்லிக்கு அழைத்துள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இந்தியா சென்றுவந்துள்ள நிலையில், அடுத்தவாரம் மைத்திரிபால சிறிசேன டில்லி செல்லவுள்ளார் என தெரியவருகின்றது.

இந்தியாவின் அழைப்பின் பிரகாரமே அவர் அங்கு செல்கின்றார் என சு.க. வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்பின்னர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா செல்லவும் திட்டமிட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் டில்லி செல்லவுள்ளார். எனினும், திகதி விவரம் இன்றும் வெளியாகவில்லை.

இலங்கையில் இவ்வருடம் முக்கிய தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையிலேயே டில்லி அரசியல் கட்சி தலைவர்களை அழைத்து பேச்சு நடத்திவருகின்றது.

Related Articles

Latest Articles