தமது கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர் என வெளியாகும் தகவலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிராகரித்துள்ளது.
மொட்டு கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம்,
” எமது கட்சி உறுப்பினர்கள் ஐ.தே.கவுடன் இணைவார்கள் என நாம் எதிர்பார்க்கவில்லை. கட்சிக்குள் இருந்து சூழ்ச்சி செய்தவர்கள் வெளியேறிவிட்டனர்.” – என்றார்.
அதேவேளை ,எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு மொட்டு கட்சி தயாராகவே இருக்கின்றது எனவும் அவர் கூறினார்.










