‘மோசடி குற்றச்சாட்டு’ – ஜனாதிபதி விசாரணைக்கு உத்தரவு! பதவி துறந்தார் நிமல்!!

விமான சேவைகள் அமைச்சுக்கும், தனியார் நிறுவனமொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

விமான சேவைகள் அமைச்சு, தனியார் நிறுவனம் ஒன்றுடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் நேற்று தகவல்களை வெளியிட்டிருந்தார்.

குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக முறையான விசாரணை நடத்துமாறே ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விசாரணைகள் முடியும்வரை , துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியில் இருந்து நிமல் சிறிபாலடி சில்வா தற்காலிகமாக விலகியுள்ளார்.

Related Articles

Latest Articles