மன்னார், மடு பொலிஸ் பிரிவில் வாழ்வாதாரத்துக்காகத் தொழில் செய்யவந்த இளம் குடும்ப பெண்ணொருவர் , யானை மிதித்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மரண விசாரணையின் மூலம் தெரியவருவதாவது,
வவுனியாவில் வசித்து வந்த குடும்பம் ஒன்று கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மன்னார், மடு பொலிஸ் பிரிவிலுள்ள கட்டையடம்பன் பகுதிக்குத் தொழில் நிமித்தம் வந்துள்ளனர். இவர்கள் தங்கள் நண்பன் ஒருவரின் காணியில் தோட்டம் செய்து வந்துள்ளனர்.
சம்பவம் அன்று இரவு வீட்டின் வளவுக்குள் சத்தம் கேட்டதும் இவர்கள் எழும்பிப் பார்த்தபோது யானை ஒன்று வளவுக்கள் நின்றதைக் கவனித்துள்ளனர்.இந்த யானை யன்னல் அருகே வந்துள்ளது. இவர்கள் ஒரு குழந்தையுடன் இருந்த மையால் வீட்டை விட்டு வெளியேற முற்பட் டுள்ளனர். உடனே இவர்கள் அறையிலிருந்து வெளியேறுவதற்கு அவர்களின் வீட்டில் இரண்டு பாதைகள் காணப்பட்டுள்ளன.
அதில் ஒன்று வெளிச்சம் உள்ள பாதையாகவும், மற்றது இருட்டுள்ள பாதையாகவும் இருந்தது. இவர்கள் இருட்டுள்ள பாதையால் குடும்பமாக வெளியேறியுள்ளனர். அப்போது மரணித்த குடும்பப் பெண்ணான கே.டபிள்யூ. ஆராச்சி வியன்சேலாக்கே கயனி மதுவயந்தி குமாரி (வயது 29) பாதையில் தடுக்குப்பட்டு வீழ்ந்ததும் இருட்டுக்குள் நின்ற யானை அவரின் மேல் மிதித்தே மரணம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண விசாரணையை மரண விசாரணை அதிகாரி ஏ.ஆர்.நசீர் மேற் கொண்டார்.