யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் பெறக் காத்திருந்த குடும்பஸ்தர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சிவசோதிலிங்கம் சொரூபன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளுக்கான பெற்றோலைப் பெற்றுக்கொள்ள தனது கியூ.ஆர். குறியீட்டை காண்பித்த நிலையில் மோட்டார் சைக்கிளுடன் மயங்கி சரிந்து விழுந்துள்ளார்.
அதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் சேர்த்தபோதும் அவர் உயிரிழந்துள்ளார். ஆரம்பகட்ட வைத்திய பரிசோதனைகளின் அடிப்படையில் உயிரிழப்புக்கு மாரடைப்பே காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ள










