நடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு புகழ் உள்ளிட்டவர்கள் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள நிலையில் தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.