யாழ். நூலகத்தை எரித்தவர்களை கண்டுபிடியுங்கள்!

” யாழ். நூலகத்தை எரித்தவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக விசாரணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதீடுமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” யாழ். நூலக மேம்பாட்டுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக நன்றி தெரிவிக்கின்றேன்.

ஆசியாவிலேயே முதன்மை இடத்தைப்பெற்ற யாழ். நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் இன்னும் ஆறாத வடுவாக உள்ளது. எனவே, நூலகத்தை எரித்தவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்.

இதனை செய்தவர்கள் இப்போதும் நடமாடிக்கொண்டிருக்கின்றார்கள், எனவே, தண்டனை பெற்றுக்கொடுப்பதற்குரிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

யாழ்ப்பாணம் கல்வியில் மேலோங்கி இருந்த ஒரு மாவட்டம். யாழ்ப்பாணம் என்றால் கல்வி மான்கள் சிறந்து விளங்கிய மாவட்டம். இன்று பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு நூலகம் எரிப்பு சம்பவமும் ஒரு காரணம்.

நிதி ஒதுக்கீட்டுக்கு நன்றி. அதேபோல எரித்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles