யாழ். நூலக அபிவிருத்திக்கு ரூ. 100 மில்லியன் ஒதுக்கீடு!
யாழ். நூலகத்தின் மேம்பாட்டுக்காக 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளேன் என ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நிகழ்த்திய வரவு – செலவுத் திட்ட உரையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
‘ தேர்தலுக்காக ஒரு நூலகம் எரிக்கப்பட்ட வரலாறு உலகில் வேறு எங்கும் பதிவாகவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் உயிராக நேசிக்கும் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது.
யாழ். மக்கள் நூலகத்திற்கு செல்லும் போது பாதணிகளை கழற்றி வெளியில் விட்டு செல்வது எனக்கு நன்றாகத்தெரியும். அந்தளவுக்கு அவர்கள் நூலகம்மீது மதிப்பு வைத்துள்ளனர். எனவே, அம் மக்களின் உணர்வுடன் கலந்த நூலகம் எரிக்கப்பட்டமை நாட்டிடை உலுக்கிய நிகழ்வு. இதற்கு நாம் நியாயம் வழங்க வேண்டும்.
எனவே, யாழ். நூலகத்திற்கு தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய முன்மொழிகிறேன்.” – என்றார்.










